வடக்கு கிழக்கு தமிழர்கள் கொழும்பில் பொலிஸ் பதிவை பெற தொடர்ந்தும் கெடுபிடி
[ புதன்கிழமை, 01 யூலை 2009, 04:33.19 AM GMT +05:30 ] [ தினக்குரல் ]
கொழும்பில் வாழும் வடக்கு கிழக்கு தமிழர்கள் தற்போதும் தமது பொலிஸ் பதிவுகளை மேற்கொள்வதற்கு தொடர்ந்தும் கெடுபிடிக்குள்ளாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பமைச்சில் கணினி மூலம் பதிவுகளை மேற்கொண்டும் இந்தக் கெடுபிடிகள் தொடர்கின்றன. கொழும்பில் நிரந்தரமாகத் தொழில்புரியும் தமிழர்கள், வாக்காளர்களாக பதிவு செய்த தமிழர்கள், ஐந்து, ஆறு வருடங்களுக்கு மேல் குடியிருக்கும் தமிழர்கள் தாம் வசிக்கும் வீட்டிலிருந்து கொழும்பில் உள்ள வேறு ஒரு வீட்டிற்கு குடியிருக்கச் செல்லும்போது இவ்வாறான கெடுபிடிகளுக்கு உள்ளாகின்றனர்.
சில பொலிஸ் நிலையங்களில் புகைப்படங்கள் கேட்கப்படுவதுடன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் வருமாறும் பொலிஸார் கூறுகின்றனர்.
ஒரு கிராம சேவையாளர் பிரிவில் உள்ள வீடு ஒன்றில் குடியிருந்து பொலிஸ் பதிவை மேற்கொண்டவர் அதே பிரிவில் உள்ள வேறு வீட்டிற்கு செல்லவும் பொலிஸ் பதிவு தேவை. அதனை மேற்கொள்ள மீண்டும் கிராமசேவையாளரின் கடிதம் பெற வேண்டும்.
சில கிராம சேவையாளர்கள் இவர்களை மீண்டும் சொந்த ஊரின் கிராம சேவையாளரிடமிருந்து வாக்காளர் பட்டியலை நீக்கியதாக கடிதம் பெற்று வருமாறு கூறி அனுப்புகின்றனர்.
ஒருவர் வடக்கில் அல்லது கிழக்கில் இருந்து சிகிச்சைக்காக அல்லது முக்கிய தேவைக்காக கொழும்பு வந்தால் மூன்று மாதங்களில் திரும்பி போய்விட வேண்டுமென சில பொலிஸ் நிலையங்களில் தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாடுகளில் இருந்து திருமணம் அல்லது மரண வீட்டிற்கு ஒரு தமிழர் வந்தால் அவரும் பொலிஸ் பதிவு மேற்கொள்ள வேண்டும்.
இதேபோல கொழும்பில் ஒரு இடத்தில் இருந்து மற்றோர் இடத்தில் உள்ள உறவினர் வீட்டில் வந்து ஒரு நாளாவது தங்கியிருக்க முடியாது.
எனனவே இவ்வாறான கெடுபிடிகளை தளர்த்தி தமிழர்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கும் தங்குவதற்கும் மாற்று நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவலப்படும் இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
...........................................
வவுனியாவில் உள்ள முகாம்களில் தங்கியிருந்த பின்னர் வெளிநாடு செல்லும் நோக்கில் கொழும்புக்கு வந்து தற்காலிக விடுதியொன்றில் தங்கியிருந்த பெண் உட்பட மூன்று பேர் கொட்டாஞ்சேனைப் பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
TAMILWIN.COM
China executes 11 over Myanmar scam centers
for én time siden
Ingen kommentarer:
Legg inn en kommentar