
தடுத்துவைக்கப்பட்டுள்ள எம் மக்களையும் போராளிகளையும் தொடர்ந்து சித்திரவதை செய்யும் இலங்கை இராணுவம் – இன்று தமிழ் நாட்டுக்கு தப்பிவந்த மூன்று பேர் தெரிவிப்பு
தடுத்துவைக்கப்பட்டுள்ள எம் மக்களையும் போராளிகளையும் தொடர்ந்து சித்திரவதை செய்யும் இலங்கை இராணுவம் – இன்று தமிழ் நாட்டுக்கு தப்பிவந்த மூன்று பேர் தெரிவிப்பு
இவ் விடயம் 10. 03. 2010, (புதன்), தமிழீழ நேரம் 21:50க்கு பதிவு செய்யப்பட்டது
செய்திகள், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல், விசேட செய்திகடந்த வருடத்தில் தாயகத்தில் நடைபெற்ற பேரழிவு நடைபெற்று நீண்ட நாளைக்கு பின்னர் மூன்று தமிழ் அகதிகள் இந்தியாவுக்கு இன்று சென்றடைந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா இராணுவத்தினரின் கொடுமையான சித்திரவதைகளை தாங்கமுடியாமல் தப்பியோடி வந்ததாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.
சுமித்குமார் கஜன் தர்மசீலன் ஆகிய யாழ்ப்பாணத்தை சொந்த இடமாக கொண்ட மூன்று பேரே இவ்வாறு படகு மூலம் தமிழ்நாட்டை சென்றடைந்தனர். தமிழ்நாட்டு காவல்துறையினரின் விசாரணைகளின் பின்னர் இவர்கள் மண்டபம் முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
சிறிலங்கா இராணுவத்தினரின் தாங்க முடியாத சித்திரவதைகள் காரணமாகவே தாம் தப்பியோடி வந்துள்ளதாகவும், அனைத்து வகையான சித்திரவதைகளையும் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் மீது மேற்கொண்டுவருவதாகவும் அவர்கள் தகவல் வெளியிட்டனர்.
இவ்வாறு சிறிலங்கா இராணுவத்தினரின் சித்திரவதைகள் இன்றுவரை தொடர்ந்துகொண்டிருப்பது தமிழ் சமூகத்திற்கும் பெரும் அச்ச உணர்வை தோற்றுவித்துள்ளது. தற்போதும் இரகசிய தடுப்புமுகாமில் 12500 தமிழ் மக்களும் போராளிகளும் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுடைய நிலை தொடர்பாக அவர்களது உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
© 2010 நெருடல் nerudal.com
-----------------------------------------------------------
Three Sri Lankan Tamils Arrive in TN Seeking Refuge
Rameswaram | Mar 10, 2010
In the first such incident after the end of the war between Sri Lankan Army and LTTE last year, three Lankan Tamils arrived here today seeking refuge, alleging 'torture' by the island security forces, police said.
Sumit Kumar, Gajan and Dharmaseelan of Jaffna District, who arrived by a boat, were sent to the Mandapam refugee camp after interrogation by the Q Branch Police of Tamil Nadu, which deals with extremist elements.
The trio had earlier come here as refugees in 2006 and returned to Sri Lanka in 2008.
Q Branch Police sources quoted the three as saying that they were coming back to India "unable to bear the torture by Sri Lankan Army personnel. They resort to all types of human rights violations, including torture and illegal detention."
This was the first time Sri Lankan Tamils had arrived after the war ended in May last year with the defeat of the LTTE, the sources said.
Over one lakh Sri Lankan refugees, who arrived over a period of time during the Lanka-LTTE conflict period, were living in different parts of the state including in 150 refugee camps.
news.outlookindia.com
Ingen kommentarer:
Legg inn en kommentar