அனுப்புநர்: Thavarajah Vyramuthu
தேதி: 21 மே, 2009 2:08 pm
இது எனது உறவுக்காரப் பெண்ணுக்கு நடந்த உண்மைச் சம்பவம், ஆனால் பெயர் விபரங்கள் தவிர்த்து வெளியிடுகின்றேன். வயது 14 இன்னமும் பருவமடையாத அவள் தாயுடன் தந்தை முல்லைத்தீவில் செல்தாக்குதலில்கொல்லப்பட்டதால் தஞ்சம் தேடி வவுனியா நோக்கி வந்திருக்கின்றார்கள். இடையில் மறித்த அவர்களை சிங்கள இராணுவம் அவர்களுடன் வந்த அனைவரையும் நிர்வாணமாக்கியுள்ளது. அது மட்டுமல்ல கொண்டுவந்த நகை, பணம் எல்லாம் பறிக்கப்பட்டது. அம்மாவுடன் நிர்வாணமாக இருந்த அவளை வந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்ற சிங்களப்படையினர் உடலுறவுகொண்டிருக்கின்றார்கள், மூர்ச்சை அடைத்து மயங்கி வீழ்ந்த அவளை சிறிது நேரம் கழித்து இரத்தம் தோய்ந்த வயிற்றுப்பகுதியுடன் அவளது தாயருகில் வீசி இருக்கின்றார்கள். தாயும் அவளைத் தூக்கிக்கொண்டு நிர்வாணமாகவே வந்திருக்கின்றாள். வழியில் ஒரு வீட்டினைக்கண்டு அந்த வீட்டினுள் சென்று அங்கே இருந்த இரண்டு துணித்துண்டுகளை மானத்தைக் காப்பாற்ற எடுத்து மறைத்துக்கட்டிக்கொண்டு மகளைத் தூக்கிக்கொண்டு வந்திருக்கின்றாள். என்ன கொடுமை அய்யா, இது. வழியில் இடைமறித்த சிங்களச் சிப்பாய் ஒருவன் மீண்டும் அந்தப் பச்சிழம் குழந்தை மீது அவர்களுடன் வந்தவர்கள் முன்னிலையில் உடலுறவு கொண்டிருக்கின்றான் இதனைப் பார்த்த அவளது தாய் மயங்கி வீழ்ந்திருக்கின்றாள். கூட வந்த உறவினர் கைத்தாங்கலாக அவளையும்தாயையும்கொண்டுவந்து ஒரு இடத்தில்தஞ்சமடைந்திருந்திருக்
கின்றரகள். இவ்வளவு கொடுமையும் தாங்கி தான் வாழவேண்டுமா என அவள் புலம்பி இருக்கின்றாள். இரவுப்பொழுது கழிந்து காலையில் எழுந்து பார்த்தபோது அவள் தூக்குமாட்டி இறந்திருந்திருக்கின்றாள். அவள் கொல்லப்பட்டாளா அல்லது தற்கொலை செய்துகொண்டாளா என்று அவளது அன்னைக்கு கூட தெரியவில்லை, புலம்பி அழுத அவளை உறவினர்களும் நண்பர்களும் கொண்டுவந்து வைத்தியசாலையில் அனுமதித்து இருக்கின்றார்கள். பித்துப்பிடித்தவளாக எந்த சம்பவமும் தெரியாதவளாக இப்போது இருக்கின்றால். சிங்களம் எம் மக்களை மட்டும் கொல்லவில்லை எம் மானம், மரியாதையும் சேர்த்துத்தான். தயவு செய்து பெயர் விபரங்கள் கேட்காதீர்கள். இது ஒன்றல்ல இரண்டல்ல ஆயிரமாயிரம் சம்பவங்கள் வெளிநாட்டு உள்நாட்டு ஊடகங்களையும் சர்வதேச உள்நாட்டு
தொண்டர் அமைப்புக்களையும் அகதி முகாங்களுக்குள் கூட அனுமதிக்காமல் தமிழரை கருவறுக்கும் படலத்தய் சிங்களமும் எதிர்கால வல்லரசு என்று கூறும் இந்தியாவும் வெளிநாட்டு உள்நாட்டு ஊடகங்களையும் சர்வதேச உள்நாட்டு தொண்டர் அமைப்புக்களையும் அகதிமுகாங்களுக்குள் கூட அனுமதிக்காமல் தமிழரைகருவறுக்கும்படலத்தய் இரகசியமாக அரங்கேற்றிக்கோண்டிருக்கின்றன.
மகிழ்நன்.
http://periyaryouth.blogspot.com
http://makizhnan.wordpress.com
http://kayalmakizhnan.blogspot.com
http://scientifictamil.blogspot.com
http://vizhithezhuiyakkam.blogspot.com
Coast Guard jet with DHS secretary onboard makes emergency landing
for 2 timer siden
Ingen kommentarer:
Legg inn en kommentar