தடுப்புக்காவல் நிலையங்களாக மாற்றப்பட்டுவிட்ட காவல்துறை நிலையங்கள்: பெருமளவு தமிழர்கள் அடைத்துவைப்பு
[ஞாயிற்றுக்கிழமை, 17 மே 2009, 08:45 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]
சிறிலங்காவின் தென்பகுதியில் உள்ள காவல்துறை நிலையங்கள் அனைத்தும் தடுப்புக்காவல் நிலையங்களாக மாற்றப்பட்டிருப்பதாக காவல்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கின்றார். இந்தக் காவல்துறை நிலையங்களில் பெரும் தொகையான தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களும் வன்னியில் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்ட பெரும் தொகையான இளைஞர், யுவதிகளும் தற்போது காவல்துறை நிலையங்களிலேயே தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பெரும் தொகையான தமிழர்களை தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டியிருந்தமையால் நாட்டிலுள்ள அநேகமாக அனைத்து காவல்துறை நிலையங்களும் தற்போது தடுப்புக்காவல் நிலையங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன என இது தொடர்பாக தெரிவித்த காவல்துறை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
2009 ஏப்ரல் 16 ஆம் நாள் வெளியிடப்பட்ட சிறப்பு வர்த்தமானி அறிவித்தலின் மூலமாகவே இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது. இதன்படி நாட்டில் உள்ள 400-க்கும் அதிகமான காவல்துறை நிலையங்கள் தடுப்புக்காவல் நிலையங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன.
இந்தக் காவல்துறை நிலையங்கள் மட்டுமன்றி அக்கரைப்பற்று, காரைதீவு, அறுகம்குடா ஆகிய பகுதிகளில் உள்ள சிறப்பு அதிரடிப்படையினரின் முகாம்கள், காலியில் உள்ள பூசா தடுப்பு முகாம், சென்னபுர புனர்வாழ்வு முகாம், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு, குற்றப் புலனாய்வுப் பிரிவு, பயங்கரவாத விசாரணைப் பிரிவு என்பனவற்றின் அலுவலகங்கள் மற்றும் முகாம்களும் தடுப்புக்காவல் நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளன.
வன்னியில் இருந்து ஏற்கனவே வவுனியாவுக்கு இடம்பெயர்ந்த சுமார் இரண்டு லட்சம் மக்களில் பல்லாயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் ஏற்கனவே இந்தத் தடுப்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சுமார் 1,500 பேர் இவ்வாறு கொண்டுவரப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும் இந்த எண்ணிக்கை இதனைவிட பெருமளவு அதிகம் என சுயாதீனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரும் தொகையான தமிழர்கள் இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ள போதிலும் தடுப்பு முகாம்களில் போதிய வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
தடுப்புக்காவல் நிலையங்கள் படுப்பதற்குக் கூட தேவையான இடவசதி காணப்படவில்லை எனத் கூறப்படுகின்றது.
அத்துடன், இவர்களுக்கு உணவுப் பொருட்கள் சிரமமாக வழங்கப்படுவதில்லை. இவர்கள் எங்கே வைக்கப்பட்டுள்ளனர் என்ற விபரங்களும் வெளியிடப்படுவதில்லை. உறவினர்கள் இவர்களைப் பார்வையிடவும் அனுமதி இல்லை.
courtesy...Puthinam.com
Animated 'Baahubali' film coming in 2027
for 23 minutter siden
Ingen kommentarer:
Legg inn en kommentar